யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் நம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும், நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com