

சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மத்திய அரசு நீட் தேர்வை திணித்ததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இன்னொரு மாணவியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் மாணவி பிரதீபா எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 495 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 1,125 மதிப்பெண்களும் பெற்றிருந்தார்.