யு.பி.எஸ்.சி.தேர்வு: ராஜேஸ்வரிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது கூடுதல் சிறப்பு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
யு.பி.எஸ்.சி.தேர்வு: ராஜேஸ்வரிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று வெளியாகியுள்ள UPSC 2025 தேர்வு முடிவில், நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் ராஜேஸ்வரி சுவே மற்றும் ராஜா மொஹைதீன் ஆகியோர் - அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் தேர்வாகி பெருமைச் சேர்த்துள்ளனர்.

குறிப்பாக, தங்கை ராஜேஸ்வரி சுவே அவர்கள் திராவிட மாடல் அரசு நடத்தும் UPSC தேர்வர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மையத்தில் தங்கி படித்தவர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 56 பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது கூடுதல் சிறப்பு.

வெற்றி பெற்றுள்ள அனைவரும் குடிமைப் பணிகளில் சிறந்து விளங்கி மக்களுக்குச் சேவையாற்ற எனது அன்பும் வாழ்த்தும். என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com