நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி நேற்றோடு (4-ம் தேதி) நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி வார்டு - 14,701, நகராட்சி-23,354, பேரூராட்சி -36,361 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com