கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி: மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு - சு.வெங்கடேசன்

போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதை மூடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி: மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு - சு.வெங்கடேசன்
Published on

சென்னை,

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதைகளை ஈரான் தடுத்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ரஷிய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு” என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com