தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள் - சென்னை ஐ.ஐ.டி.யில் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி பேச்சு

ஒரு நாடு அறிவியலில் முதலீடு செய்யும்போது, ​​அது தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது என ஹுசைன் அலி தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள் - சென்னை ஐ.ஐ.டி.யில் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி பேச்சு
Published on

சென்னை,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கட்டுப்பாட்டில் சான்சிபார் என்ற தீவுக்கூட்டம்(Archipelago) அமைந்துள்ளது. இதன் அதிபரான ஹுசைன் அலி மின்யி சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற 63-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

“ஒரு புதிய கண்டுபிடிப்பு நம்மை வியக்க வைக்கும்போது மட்டுமல்ல, மனித வாழ்வின் கண்ணியத்தை மேம்படுத்தும்போதுதான் அதன் மிகச்சிறந்த நிலையை அடைகிறது. உங்கள் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றமே உங்கள் வெற்றிக்கான அளவுகோலாகும். தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள்.

கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. ஒரு நாடு அறிவியலில் முதலீடு செய்யும்போது, ​​அது தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகங்களை வடிவமைக்கவும், பொருளாதாரங்களை வலுப்படுத்தவும், தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கவும் செய்கின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com