உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் - எல் முருகன் வாழ்த்து

தேச சேவையில் தொடர்ந்து வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன் என எல் முருகன் தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத்,எல் முருகன்
Published on

சென்னை,

யோகி ஆதித்யநாத் கடந்த 1972-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி உத்தரபிரதேசத்தின் பவுரி கர்வால் கிராமத்தில் பிறந்தார். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சிறப்பு பூஜை

ஆதித்யநாத் பிறந்தநாள் தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது. யோகி ஆதித்யநாத் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து மாநிலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என ஆதரவாளர்கள் வேண்டினர்.

மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரப் பிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளுடனும், வளத்துடனும் திகழவும், தேச சேவையில் தொடர்ந்து வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com