வடுவூரை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும்

வடுவூரை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும்
வடுவூரை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும்
Published on

வடுவூர் நல வர்த்தக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராமன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன், மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். முடிவில் பொருளாளர் அபுசாலிக் நன்றி கூறினார். கூட்டத்தில் வடுவூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று மட்டுமே உள்ளதால், 2-வதாக மேலும் ஒரு வங்கி தாடங்க வேண்டும். ஏற்கனவே உள்ள இந்தியன் வங்கியில் கேஷ் டெபாசிட் எந்திரம் வைக்க வேண்டும். வடுவூரை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும். உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com