

கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவின் பிறந்த நாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு நகர செயலாளர் பால்ராஜ் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எல். எஸ். கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்கள்.