வாஜ்பாயின் தொலைநோக்கும் பார்வை என்றும் உயிரோடு இருக்கும்: நயினார் நாகேந்திரன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வாஜ்பாயின் தொலைநோக்கும் பார்வை என்றும் உயிரோடு இருக்கும்: நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”மக்கள் மனதில் என்றும் அழியாத தடம் பதித்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் நினைவு நாள் இன்று, அவரின் உயர்ந்த சிந்தனைகளையும், எளிமையான அணுகுமுறையையும், நாட்டின் வளர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும், தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை தனது செயலாலும் சொற்களாலும் உணர்த்திய மாபெரும் தலைவர். கவிதை நயம் கொண்ட பேச்சும், கண்ணியமான அரசியல் பண்பும், இந்தியாவின் எதிர்காலம் மீதான அவரது நம்பிக்கையும் தலைமுறைகளை கடந்து ஊக்குவிக்கின்றன.

காலம் கடந்தாலும், வாஜ்பாய்-ன் தேசப்பற்று, தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்கள் மீதான அக்கறை நம் நினைவுகளில் என்றும் உயிரோடு இருக்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com