வள்ளலார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.
முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

வள்ளலார் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.

உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com