

சென்னை,
தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் போட்டியில் 7.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கும், மகளிர் ஒற்றையர் பாட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊக்கமது கைவிடேல் என்ற ஆத்திச்சூடியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் உங்களின் அசராத உறுதியும், தன்னம்பிக்கையும் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது. தேசத்திற்கான அர்ப்பணிப்புமிக்க உங்களின் திறமை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கட்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.