வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு; கவலையளிக்கிறது..- எல்.முருகன்

விரைவில் உடல் நலம்பெற்று, பணிகளைத் தொடர இறைவனை வேண்டுகிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு; கவலையளிக்கிறது..- எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வானதி சீனிவாசன் திடீர் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கவலையளிக்கிறது.

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திறம்பட செயலாற்றிய வானதி சீனிவாசன், விரைவில் உடல் நலம்பெற்று, தனது தேர்தல் பணிகளைத் தொடர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com