வண்டலூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்பு

தெருவில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.
வண்டலூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்பு.
மலைப்பாம்பு
Published on: 

சென்னை,

வண்டலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத பாம்பு

வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை அருகில் உள்ள பழைய ஓட்டேரி, வேம்புலி அம்மன் கோவில் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவிற்கு அருகில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் அதனைச் சுற்றி காப்புக்காட்டுப் பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்து ராட்சத மலைப்பாம்பு ஒன்று திடீரென குடியிருப்பு பகுதிக்குள் ஊர்ந்து வந்துள்ளது.

பொதுமக்கள் அதிர்ச்சி

தெருவில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். உடனடியாக இது குறித்து தாம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

லாவகமாகப் பிடித்த வனத்துறையினர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பின் அந்த மலைப்பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 20 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

காட்டில் விடுவிப்பு

மீட்கப்பட்ட ராட்சத மலைப்பாம்பு பாதுகாப்பாகத் தாம்பரம் வனச் சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, வன அதிகாரிகள் அந்த பாம்பை அடர்ந்த காப்புக்காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். வனத்துறையினரின் இந்த விரைவான நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

X