கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேகம்

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
கிருஷ்ணன் கோவிலில் வருசாபிஷேகம்
Published on

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் 17-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் இரவு வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பரமபுருஷ ஆராதனை, பஞ்ச சூக்த ஹோமம், சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விமானம், மூலவர் விஷ்வக்சேனர், கருடாழ்வாருக்கு கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவு ருக்மணி திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com