விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை ; அண்ணன் மகன்கள் தலைமறைவு

குடும்பத் தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரபமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை ; அண்ணன் மகன்கள் தலைமறைவு
Published on

சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ் (29). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ் (25), சுனில்(22) ஆகிய இருவரும் அதிஷிடம் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த இரண்டு பேரும் அதிஷை கத்தியால் வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க வந்த அதீஷின் அண்ணன்கள் முரளி (33), சுகுமார் (38), உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.

உறவினர்கள் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் அதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அதீஷின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com