மருதமலையில் 9-ந் தேதி பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 9-ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது.
மருதமலையில் 9-ந் தேதி பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை
Published on

கோவை,

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 9-ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் அதிக அளவில் மருதமலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்க வருகிற 9-ந் தேதி மருதமலை மலைப்பாதையில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பஸ்களிலும் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com