மருதமலை மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை!

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மருதமலை
Published on: 

கோவை,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நெரிசலை தவிர்க்க மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

விழாவையொட்டி கோவிலில் தினமும் யாக சாலை பூஜைகள், அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகிறது. தினமும் மதியம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சூரசம்ஹாரம்

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதை காண கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை (திங்கட்கி ழமை) திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

வாகனங்களுக்கு தடை

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மருதமலை கோவிலுக்கு மலைப் பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக அல்லது கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

X