வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார், சி.பா. சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா

வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார், சி.பா. சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார், சி.பா. சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா
Published on

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் தொடக்கப்பள்ளி மற்றும் சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளிச் செயலர் ஆதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னைவாழ் வேப்பங்காடு நாடார் சங்க தலைவர் சந்திரபோஸ், நிர்வாகக்குழுத்தலைவர் சங்கரநாராயணன், பள்ளி பொருளாளர் வைகுண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அழகுமணி வரவேற்று பேசினார்.

தொடக்கப்ள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை தொழில் அதிபர் ஜவஹர் சித்திரைவேல் வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சித்திரைவேல், ஆதிஅண்ணாவி, ஆசிரியர் மகேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சுரேஷ்குமார், சிலம்பு பயிற்சியாளர் சிவமுத்துலிங்கம், பள்ளி பழைய மாணவர் வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com