விண்ணப்ப படிவங்களை சரிபார்க்கும் பணி

விண்ணப்ப படிவங்களை சரிபார்க்கும் பணி
விண்ணப்ப படிவங்களை சரிபார்க்கும் பணி
Published on

வால்பாறை

வால்பாறை பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பதிவேற்ற 10 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியை வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தாசில்தார் அருள்முருகன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். வால்பாறை பகுதியில் இதுவரை 16 ஆயிரத்து 279 ரேஷன் கார்டுதாரர்களில் 13 ஆயிரத்து 390 ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) வால்பாறையில் சி.எஸ்.ஐ. தேவாலய திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் விடுபட்டவர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று வால்பாறை தாசில்தார் அருள்முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com