நாளை தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.
நாளை தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி  சி.பி. ராதாகிருஷ்ணன்
Published on: 

புதுடெல்லி,

பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை (அக்டோபர் 30) தமிழகம் வர உள்ளார்.

மலர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வர உள்ளதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா

மேலும், திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பொன்விழா மற்றும் 39வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com