2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுக படிப்படியாக தவெகவிற்கு வந்துவிடும் என்கிறார்கள்; அது கனவில் கூட நடக்காது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய்
- எடப்பாடி பழனிசாமி
Published on: 

தாராபுரம்,

தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கருப்பு, சிவப்பு கலர் சைக்கிளில் சென்று 2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர் விஜய். திமுகவின் கிளைதான் தவெக. அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

“மாற்றுக்கட்சிக்கு ஓடிப்போனவர் நல்லவரா வல்லவரா?” மாற்றுக்கட்சிக்கு சத்தியபாமா விலை போய்விட்டதால் தாராபுரத்தில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற வைத்தவர்களையும் வாக்காளர்களையும் சத்தியபாமா பொருட்படுத்தவில்லை.தாராபுரம் மக்களின் வாக்குகளை விற்ற சத்தியபாமாவை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தாதவர்தான் தவெக தலைவர் விஜய்.

கரூர் நெரிசல் துயரம் நடந்த நேரத்தில் தவெக தலைவர் விஜய் காரில் ஏறி ஓடிவிட்டார்.கரூர் துயரத்தின்போது 72 நாட்கள் வீட்டை விட்டு தவெக தலைவர் விஜய் வெளியே வரவில்லை. கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறுபவர் தேவையா?

வேறு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்த தவெக தூய கட்சி அல்ல, தீய கட்சி.இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை திரும்ப பெறுவோம் என தவெகை கம்யூனீஸ்ட் கட்சிகள் எச்சரித்தன. இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே கூறுகின்றனர். அதிமுக தவெக வசம் சென்றுவிடும் என்று கனவிலும் கூட நினைக்காதீர்கள். அதிமுக படிப்படியாக தவெகவிற்கு வந்துவிடும் என்கிறார்கள்; அது கனவில் கூட நடக்காது.அதிமுகதான் தவெகவை விழுங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com