

சென்னை,
மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- "மதுராந்தகம் தொகுதி மக்கள் 'ஹாட்ரிக்' வெற்றியை எனக்கு கொடுத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது வெற்றிக்கு முழுக் காரணம் முதல் -அமைச்சர் விஜய்தான். அவரது முகத்திற்கு தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். பல் வேறு விமர்சனங்களை தாண்டி நான் வெற்றி பெற்றுள்ளேன்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை வைத்து தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து என் மீது பல்வேறு விமர்சனங்களை பரப்பினர். என்னை தோற்கடிக்க 2 பேரும் சேர்ந்து சதி வேலை செய்தனர். அதனையும் மதுராந்தகம் தொகுதி மக்கள் முறியடித்தனர். மதுராந்தகம் தொகுதி மக்களின் அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.
மதுராந்தகம் தொகுதி வளர்ச்சிக்கு சிறப்பான திட்டங்களை செய்வதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். மக்களோடு நான் இருந்ததால் என்மீது மக்கள் வெறுப்பு காட்டவில்லை. சட்டமன்றத்தில் தொகுதி மக்களின் கோரிக்கையை பேசி பெற்றுத்தருவேன்"இவ்வாறு அவர் கூறினார்.