திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி.


திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி.
x

தலைவர் கலைஞரின் அன்பிற்கு பாத்திரமான விஜயகாந்த் எல்லோர் மீதும் அன்பு காட்டும் பண்பாளராக வாழ்ந்தவர் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தி.மு.க. துணை பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்பு காட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவு நாளான இன்று அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story