பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்
Published on

சென்னை,

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தீவுத்திடலுக்கு இன்று காலை 6 மணிக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து வரப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு கேப்டன் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com