மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்..!
Published on

சென்னை,

உடல் நிலை காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தே.மு.தி.க. சார்பில் மட்டுமே நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com