வில்லிவாக்கம்: டேங்கர் லாரி மோதி ஒருவர் பலி- ஓட்டுநர் கைது

இந்த கோர விபத்தில் சிக்கிய அன்பழகன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வில்லிவாக்கம்: டேங்கர் லாரி மோதி ஒருவர் பலி- ஓட்டுநர் கைது.
டேங்கர் லாரி
Published on: 

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த லாரி

சென்னை வில்லிவாக்கம் வழியாக இன்று (புதன்கிழமை) காலை சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

ஒருவர் பலி- 3 பேர் காயம்

இந்த கோர விபத்தில் சிக்கிய அன்பழகன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஓட்டுநர் கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநர் அஜித்குமாரைக் கைது செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X