நெருங்கும் விநாயகர் சதுர்த்தி; கோயம்பேடு சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நெருங்கும் விநாயகர் சதுர்த்தி; கோயம்பேடு சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே தொடர் விடுமுறையின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட நேரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போதி அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததே நெரிசலுக்கு காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com