விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது.
ஆம்னி பஸ்
கோப்பு படம்
Published on

சென்னை,

சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பஸ்,ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ரெயில்களில் இருக்கைகள் முன் கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமி டங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள் ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

4 மடங்கு கட்டணம் உயர்வு

அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகிவிடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னை யில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்ட ணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகு மரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை கட்டண விவரம்

அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com