விநாயகர் சதுர்த்தி திருநாள்: எல். முருகன் வாழ்த்து!

இந்நன்னாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மனமுருகி வழிபடுவோம்.
எல். முருகன்
Published on

சென்னை,

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வாழ்த்து

இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மனமுருகி வழிபடுவோம்.

நாடி வருவோரின் வினைகள் தீர்த்து, தடைகளை நீக்கி, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை விநாயகப் பெருமான் அருளிட பிரார்த்திக்கிறேன். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com