ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் விதிமீறல் - 3 மாவட்டங்களில் வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் விதிமீறல் - 3 மாவட்டங்களில் வழக்கு பதிவு
Published on

காஞ்சிபுரம், 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  நாட்டின் 76 வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு பேரணி நடத்த போவதாக கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பல்வேறு மேல்முறையீடுகளுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் இந்த பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த பேரணியின்போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாக புகார்கள் வந்தன. இதனை விசாரணை செய்த போலீசார் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த பேரணியில், பேரணியை நடத்தியவர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலும் விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பேரணியின்போது விதிமுறைகள் மீறப்பட்டதா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com