சேலத்தில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

உதய்பூர் கொலையை கண்டித்து சேலத்தில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலத்தில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் கண்ணையாலால் படுகொலையை கண்டித்தும், அவரை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் சேலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநகர செயலாளர் அன்புராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட துணை தலைவர் ரமேஷ் உள்பட விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com