வ.உ.சிதம்பரனாரின் தியாகமும் நாட்டுப்பற்றும் என்றும் வழிகாட்டும்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.
வ.உ.சிதம்பரனாரின் தியாகமும் நாட்டுப்பற்றும் என்றும் வழிகாட்டும்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்
Published on: 

சென்னை,

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்துக்கும் நாட்டுப்பற்றுக்கும் வீரவணக்கம் செலுத்துவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

புகழாரம்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்.

தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X