இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை
Published on

காரைக்குடி, 

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் அணி முதல் பரிசையும், மாணவர்கள் அணி 3-வது பரிசையும் பெற்றது. போட்டியில் கல்லூரியின் 3-வது ஆண்டு வணிகவியல் துறை மாணவி ரசிகா, 2-வது ஆண்டு ஆங்கில இலக்கியம் மாணவி அப்சரா ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழக இறகுப்பந்து அணிக்கு தேர்வு பெற்று இம்மாத இறுதியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழக அளவிலான போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com