

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி
த.வெ.க. - 103
அ.தி.மு.க. - 74
தி.மு.க. - 50
நா.த.க. - 0
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.