வி.எஸ்.பாபு மரணம்: கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

வி.எஸ்.பாபுவின் மறைவால் த.வெ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வி.எஸ்.பாபு மரணம்: கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
Published on: 

சென்னை,

வி.எஸ்.பாபு மரணம்

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

70 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், கடந்த 19-ந்தேதி மதியம் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் விஜய், இறுதிச்சடங்கின்போது வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்றார். திரு.வி.க.நகர் மின்மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சட்டசபையில் த.வெ.க. பலம் குறைந்தது

கடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சட்டசபையில் த.வெ.க. பலம் 107 ஆக குறைந்தது.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த மரக தம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சமீபத்தில் நடந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்றதால் சட் டசபையில் த.வெ.க.வின் பலம் 109 ஆக உயர்ந்தது. தொடர்ந்து வி.எஸ்.பாபு மறைந்ததால் சட்டசபையில் த.வெ.க.வின் பலம் மீண்டும் 108 ஆக குறைந்துள்ளது.

காலியானதாக அறிவிப்பு

இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவை அடுத்து கொளத்தூர் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 இடங்கள் காலி

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில் அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் (அ.தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தவை), திருச்சி கிழக்கு (முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த தொகுதி) ஆகிய 5 இடங்கள் காலியாக உள்ளது.

கொளத்தூர் வி.எஸ்.பாபு மறைவால், காலி இடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 228 ஆக உள்ளது.

X