வி.எஸ். பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் விஜய் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்
Published on: 

சென்னை,

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த வேதனை

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பேரிழப்பு

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஆழ்ந்த இரங்கல்

வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X