

சத்தியமங்கலம்,
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 56,672 கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.55 அடியாக உள்ளது. அணையில் தற்போது 8.81 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக எல்.பி.பி. வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பவானி ஆற்றில் நீரின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, அப்பகுதியில் 54.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.