மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி அணையில் இருந்து 120 நாட்களுக்கு நாளை முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு 90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com