ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்; வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டினார்

திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில் ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகளை வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்; வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டினார்
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவேங்கடம், வடக்கு பாறைப்பட்டி, தெற்கு பாறைப்பட்டி, செல்லபட்டி, ஆவுடையாபுரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இல்லங்கள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு திருவேங்கடம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ 56 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காண அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜீவா வரவேற்றார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மண்டல பேரூராட்சிகள் செயற்பொறியாளர் தர்மராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம்சன் ஏசுதாஸ், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் திருச்செல்வம், திருவேங்கடம் பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜனார்த்தனபிரபு, குருவிகுளம் யூனியன் தலைவர் விஜயலட்சுமி, துணை தலைவர் முருகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com