த.வெ.க.விடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்டுள்ளோம் - செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணியில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் இடையேயான அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவை டெல்லி தலைமையே எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

த.வெ.க.விடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்டுள்ளோம் - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழக வெற்றிக்கழகத்திடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடம் கேட்டுள்ளோம். மேலும், இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவை டெல்லி தலைமையே எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கருத்து, வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தல் மற்றும் கூட்டணி அரசியல் தொடர்பாக புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வட்டாரங்களில் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com