

சென்னை,
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;
"என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் நொறுங்கும். தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம். சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வளர்கிறோம்.
வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கொள்கைக்கு எதிரான விஷயங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் கைவிடப்படவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 100 நாள் திட்டம் 125 நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 3 மாதத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் நலனே முக்கியம்.
மக்களே இனிதான் நீங்கள் நம்முடன் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும். நான் உட்பட அனைவரும் உங்களின் சேவகர்கள். நமது அரசுக்கு எதிரான அதிகளையும், சக்திகளையும் முறியடிப்போம்.
இந்த விழாவில் விருதுகளை வாங்கப்போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு அவர் பேசினார்.