குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி

சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79-வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்த்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம். வாழிய பாரத மணித்திரு நாடு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com