

கோவை,
குதிரை பேரத்தை தொடங்கி வைத்ததே தி.மு.க.தான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“குதிரை பேரம் என்று கூறும் தி.மு.க.வினரை பார்த்து நான் கேட்கிறேன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை பதவியில் இருந்து ராஜினாமா செய்து, மீண்டும் அவரை தி.மு.க. கட்சிக்காரராக மாற்றி போட்டியிட வைத்து எம்.எல்.ஏ. ஆக்கினீர்களே, இதற்குப் பெயர் என்ன குதிரை பேரமா, பெருச்சாளி பேரமா?
குதிரை பேரத்தை தொடங்கி வைத்ததே தி.மு.க.தானே. விஜய் அரசுக்கு எதிர்தரப்பில் இருந்து வரும் தாக்குதல் கணைகளை தடுக்க ம.தி.மு.க. கவசமாகவும், கேடயமாகவும் செயல்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.