

சென்னை,
த.வெ.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், நாளை தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பல காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய அவர், தனது 52-வது பிறந்த நாள் முதல்-அமைச்சராக கொண்டாடுகிறார். அதனால், இந்த முறை பிறந்த நாளை வித்தியாசமாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை திருச்சி சவுகத் ஏற்பாடு செய்திருந்தார்,மேலும் கழக நிர்வாகிகள், தோழர்களும் தோழிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.