தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யிடம் உள்ளது.
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com