

சென்னை,
திமுக ஆட்சியில் திருவான்மியூர்-உத்தண்டி திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக மைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார்.
6 மாதங்களில், பொதுப்பணித் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த திமுக ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. தவெக ஆட்சியமைத்த பின்னர் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளாதக குற்றம்சாட்டி டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
தி.மு.க ஆட்சியில் பெயரளவுக்கு தான் ஆன்லைன் டெண்டர். முன்னாள் இருந்த அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்களை எடுத்துள்ளார்கள்.. ஊழல் கண்காணிப்பு துறையில் புகாரளித்திருக்கிறோம், இனிமேல் அதுபோல் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது, எல்லாவற்றையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் திருவான்மியூர் -உத்தண்டி உயர்மட்ட சாலை குறித்த அறிவிப்பு இல்லை.தற்போது அந்த திட்டம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். திருவான்மியூர் - உத்தண்டி திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்திலும் சரியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய போலியான அரசு கிடையாது. மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி, மின்சார வசதி இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் சரிசெய்ய உள்ளோம். எந்த இடத்தில் எல்லாம் இடிஞ்சு விழுற மாதிரி இருக்கோ அங்கெல்லாம் அதிகாரிகளை இந்த ரெட் கலர் ஸ்டிக்கர் ஒட்ட சொல்லிருக்கோம்
தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 2025-ம் ஆண்டு மட்டும் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது போன்ற பேட் வொர்க் பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் செய்துள்ளனர்.
அரசு துறை சார்ந்த டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தோம். கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்களை எடுத்துள்ளன. இது குறித்து புகார் அளித்துள்ளோம்.
தற்போதைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்றெல்லாம் இருக்காது. ஒரு திட்டம் தொடங்கப்படும்போது, குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத சம்பந்தப்பட்ட டெண்டர் நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைக்க உள்ளோம். அவர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்.