

சென்னை,
ரோந்துப் பணிகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை (SSF), மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன். தீவிர ரோந்துப் பணி, குற்றத்தடுப்பு காவல் நடவடிக்கைகள். சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
குறிப்பிடத்தக்க களப்பணிகள்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து விழிப்புடனும், முனைப்புடனும் குற்றத் தடுப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதில் இப்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றத்தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குற்றம் நடைபெற சாத்தியமுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேகரித்து. ஆய்வு செய்து. கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு தொடர் ரோந்து செய்து வருகிறது. மேலும் காவல் இருப்பை உறுதிசெய்து. வழக்கமான ரோந்துப் பணிகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் 01.10.2026 முதல் 08.10.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிகள் பின்வருமாறு:
05.10.2026 அன்று ராமநாதபுரம் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் இருந்த போது காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து (1091) வந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையின் போது. 13 வயது சிறுமி தனது தங்கையுடன் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவர் அவர்களிடம் தகாதமுறையில் நடந்து கொண்டு, பாலியல் தொல்லை அளித்து, மிரட்டியதாகத் தெரிவித்தார்.
உடனடியாகச் செயல்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். சிறுமி புகார் அளிக்க உதவிபுரிந்தனர். அச்சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், முதுகுளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
08.10.2026 அன்று திருப்பூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று பெண்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான அழகர் அயர்னிங் & பேக்கிங் கடையில், தங்களுடன் சேர்த்து ஒரு சிறுவன்.
மூன்று சிறுமிகள் மற்றும் ஆறு ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 பேர், ஓராண்டிற்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் வேலை செய்யவைக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல கேட்டுக்கொண்டார்கள்.
உடனடியாக அனுமதிக்கப்படவில்லை என்றும் தங்களை மீட்க செயல்பட்ட உதவுமாறு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவின் மூலம் பாதுகாப்பாகக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டார்கள்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, 4-ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாகப் பள்ளிக்கு வரவில்லை எனப் பள்ளித் தலைமை ஆசிரியர் தெரிவித்ததன் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது. அறிவுசார் குறைபாடு கொண்ட சிறுமியின் தந்தை, அவரை ஓர் அறைக்குள் அடைத்து வைத்து. வெளியில் செல்ல அனுமதிக்காமல் இருந்தது தெரியவந்தது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாகத் தலையிட்டு. சிறுமியின் தந்தையின் நிலைமையைப் புரிந்து கொண்டு சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு. குழந்தைகள் நலக்குழுவின் மூலம் பாதுகாப்பாகக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். மேலும், அறிவுசார் குறைபாடு கொண்ட அவரது தந்தையும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு 08.10.2026 அன்று. திருநெல்வேலி மாவட்ட அதிரடிப்படையினருக்கு 21 வயதுடைய பெண் ஒருவர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையின் போது. அப்பெண் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளதாகவும், தனது மற்றும் தனது தங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததாகவும், அடையாளம் தெரியாத நபர்கள், அப்புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையில் மாற்றம் செய்து, அவர்களுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்தார். உடனடியாகச் செயல்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். அப்பெண்ணுக்குத் தகுந்த ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்கினர். மேலும், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உதவினர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், களக்காடு காவல் நிலையத்தில் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
01.10.2026 முதல் 08.10.2026 வரை. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணிபிரிவுகள் 283 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நேரடியாகச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். 23 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி புரிந்துள்ளனர். மேலும், காணாமல் போன 3 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குற்றத்தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக 4,601 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், 16,713 குற்றம் நடக்க சாத்தியமுள்ள பகுதிகள். குற்றத்தடுப்பு ரோந்துப்பணிகளின் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுகளைக் கொண்ட 4 நபர்கள் மீட்கப்பட்டு. அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய 45 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலையீட்டின் பேரில் சென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தேனி. தென்காசி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருப்பூர், கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புகார்களுக்கு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் உதவியாக இருந்தனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் குறும்படப் போட்டியில் பங்கேற்பதற்கான படைப்புகளைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 25.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது குறும்படங்களை https://bit.ly/SSF-ShortFilmCompetition என்ற இணையதள முகவரியின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் 1091-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ கருதப்படும் இடங்கள் மற்றும் பகுதிகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் 1091 உதவி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உரிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, குற்றத் தடுப்பு. உடனடி தலையீடு. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.