என்ன முடிவெடுக்க போகிறார் மு.க.ஸ்டாலின்..! இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் முகாம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்ன முடிவெடுக்க போகிறார் மு.க.ஸ்டாலின்..! இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் முகாம்

Go back Congress

காங்கிரஸ் தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Go back Congress என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தின் முன் பெண் தொண்டர் நின்று வருகிறார்.

என்ன முடிவெடுக்க போகிறார் மு.க.ஸ்டாலின்..!

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுடன் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட 20 பேர் வந்துள்ளனர்.

2 தனி விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்த அவர்கள் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தலாம் என்று கூறப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இன்று ஒரு நாளே மீதமுள்ள நிலையில், ஸ்டாலினை சந்தித்து ஆதரவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கு முன்பாக திமுகவில் இந்த அவசர ஆலோசனை நடைபெற்றது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

டெல்லியிலிருந்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதயநிதி இல்லத்திற்கு ஸ்டாலின் வருகை

அப்போலோ மருத்துவமனையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்பு நடைபெறும் நிலையில் உதயநிதி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

சற்று நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புறப்பட்டனர்.

X