ஹெலிகாப்டர் விபத்தில் நடந்தது என்ன?... கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்

விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டர், அதிநவீனமானது, மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது ஆகும்
ஹெலிகாப்டர் விபத்தில் நடந்தது என்ன?... கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் ராவத்தின் மனைவி உள்பட மேலும் 12 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சென்ற எம்.ஐ. 17வி 5 ரக ஹெலிகாப்டர் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலைப்பள்ளத்தாக்கு பகுதியாகும். ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்த வேகத்தில் உதிரிபாகங்கள் எரிந்து நலாபுறமும் சிதறின. விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும்.

மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெறுகிறது. அந்த பகுதியில் இரவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை பொருத்தி, விமானப்படையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com